இந்தியா

இப்போ தான் நிம்மதியா இருக்கு..! சுபான்ஷூ சுக்லா மனைவி உருக்கம்

Published On 2025-06-26 18:56 IST   |   Update On 2025-06-26 18:56:00 IST
  • இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
  • புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றனர். அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஹூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர்.

அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர். ஆரத்தழுவி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு உள்ளிட்ட 4 பேரும் வரவேற்பு பானத்தை அருந்தினர்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைத்த காட்சியை, நேரலையில் கண்டு மனம் நெகிழ்ந்து அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

இந்நிலையில், டிராகன் விண்கலம் பத்திரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில் சுபான்ஷு சுக்லா மனைவி காம்னா நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்," திக்... திக்... நிமிடங்கள் பறந்துவிட்டன. நிம்மதியாக உணர்கிறேன். இவ்வளவு நாட்களாக பயத்தோடு இருந்தேன். இப்போது அது நிம்மதியாக மாறிவிட்டது" என்றார்.

Tags:    

Similar News