இந்தியா

ஐதராபாத்தில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

Published On 2025-09-07 10:53 IST   |   Update On 2025-09-07 10:53:00 IST
  • போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணித்து வந்தனர்.
  • பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் சங்கிலி போல் நாடு முழுவதும் போதை மருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் , மீரா சாலையில் இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் வங்கதேசத்தை சேர்ந்த பாத்திமா முராக் ஷேக் (வயது 23) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 105 கிராம் எடையுள்ள மெபெட்ரோன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் போதை பொருளை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வாங்கி வந்ததாக தெரிவித்தார். போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணித்து வந்தனர். நேற்று போலீசார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்தனர்.

அங்கு மருந்து தயாரித்துக் கொண்டு இருந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிற்சாலையில் இருந்து ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். 27 செல்போன்கள் 3 கார்கள், 4 மின்னணு எடை எந்திரம் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்த ப்படும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தொழிற்சாலையில் இருந்து பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் சங்கிலி போல் நாடு முழுவதும் போதை மருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தற்போது மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு ஒரு சவாலானது மற்றும் அரிதானது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தொழிற்சாலையை கண்டுபிடித்து முக்கிய நபர்களை கைது செய்து இருக்கிறோம். பிடிபட்டவர்கள் மூலம் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News