இந்தியா
ஐதராபாத்தில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்
- கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொலை செய்த பரகா போராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணஜோதி போரா. இவரது மனைவி பரகா போரா. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் வந்தனர். நர்சிங்கி, கோகோ பெட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்தது. இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. கணவர் தினமும் தன்னிடம் தகராறு ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ண ஜோதி போரா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நர்சிங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொலை செய்த பரகா போராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.