இந்தியா

படுக்கையில் வேறு வாலிபருடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவர்

Published On 2023-01-11 21:08 IST   |   Update On 2023-01-11 21:08:00 IST
  • கள்ளத்தொடர்பு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • மனைவி வேறு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்துள்ளார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், வெடுரு குப்பம், நக்லம் பள்ளியை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி தேஜாஸ்ரீ (வயது 25). தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

சேகர் வேலைக்கு சென்ற பின்னர் தேஜாஸ்ரீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு உள்ள தாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக தேஜாஸ்ரீயிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை கண்காணித்து வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேகர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து சேகர் வீட்டிற்குள் சென்றபோது தேஜாஸ்ரீ அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.

இதனைக் கண்ட சேகர் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தேஜாஸ்ரீ வலியால் அலறி துடித்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேஜாஸ்ரீ அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தனர். அங்கு தேஜாஸ்ரீ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேஜாஸ்ரீ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர். கள்ளக்காதலில் ஈடுபட்டதால் மனைவியை வெட்டி கொன்ற சேகரும் ஜெயிலுக்கு சென்றதால் அவரது 3 மாத குழந்தை அனாதையாக உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News