இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடியை இழந்தேன் - கவுதம் அதானி வேதனை

Published On 2025-10-12 07:34 IST   |   Update On 2025-10-12 07:34:00 IST
  • ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.
  • அதானி குழுமம் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதனை குழுமம் மற்றும் செபி திட்டவட்டமாக மறுத்தது. பின்னர் சிறிதுகாலம் களைத்து மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மீடனும் பழைய நிலைமைக்கு உயர்ந்தது.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பேசிய கவுதம் அதானி, "ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழுமம் சந்தை மதிப்பில் $100 பில்லியனை (இந்திய மதிப்பில் ரூ.8.8 லட்சம் கோடி) இழந்து விட்டது. முற்றிலும் பொய்யை ஆயுதமாக்கியதன் விளைவால், அந்த இழப்புகள் ஏற்பட்டது" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News