கர்நாடகாவில் 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
- அங்குள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. இதேபோல் இன்றும் 28 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் பெங்களூருவில் மேகமூட்டமாக வானிலை இருக்கும். இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.