இந்தியா

டெல்லியில் பலத்த மழை- 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டது

Published On 2023-03-31 14:09 IST   |   Update On 2023-03-31 14:09:00 IST
  • மழையால் விமான போக்குவரத்து முடங்கியது.
  • விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

புதுடெல்லி:

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இடி, மின்னலுடன், வெளுத்து வாங்கிய இந்த மழையால் ரோடுகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த மழையால் விமான போக்குவரத்தும் முடங்கியது. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த 22 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

லக்னோ, ஜெய்ப்பூர், டேராடூன், அகமதாபாத், சண்டிகர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அதில் பயணம் செய்த விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

இந்த திடீர் மழையால் டெல்லி மாநகரம் குளுமையாக மாறியது.

Tags:    

Similar News