இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுகாதார துறை திடீர் உத்தரவு

Published On 2025-06-06 10:16 IST   |   Update On 2025-06-06 10:16:00 IST
  • திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர்.
  • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று. பக்தர்கள் பீதியடைய வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர். 31,268 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News