இந்தியா

இந்தியா வந்தடைந்தார் விண்வெளி நாயகன்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Published On 2025-08-17 03:06 IST   |   Update On 2025-08-17 04:12:00 IST
  • சுபான்ஷு சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார்.
  • இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்த அவர் கடந்த, மாதம் 15-ம் தேதி பூமிக்குத் திரும்பினார்.

இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், சுபான்ஷு சுக்லா தனது மனைவி, மகனுடன் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் உள்பட பலர் உற்சாகமாக வரவேற்றனர்.

சுபான்ஷு சுக்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்துகொள்கிறார். அவர் தனது சொந்த ஊரான லக்னோ சென்று சில தினங்கள் தஙகியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News