இந்தியா

சமூக நீதிக்காக அரசு பணியாற்றி வருகிறது: நிர்மலா சீதாராமன்

Published On 2024-02-01 11:27 IST   |   Update On 2024-02-01 11:31:00 IST
  • விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார்.

அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது.

விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரும்பான்மையுடன் பாஜக அரசுக்கு மீண்டும் மக்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

2.3 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடன் வழங்கப்பட்டுள்ளது.

Similar News