இந்தியா

ஒரு ரூபாய் பயிர் இழப்பீடு வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள்: விவசாயிகளின் புகாருக்கு மத்திய அமைச்சரின் ரியாக்ஷன்

Published On 2025-11-03 21:40 IST   |   Update On 2025-11-03 21:40:00 IST
  • இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது.
  • இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளின் பயிர்களுக்கு அரசு உதவியுடன் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக இந்த காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், சேதமடைந்த பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், 20 ரூபாய் இழப்பீடு தந்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

விவசாயிகள் புகாருக்கு சிவராஜ் சிங் சவுகான் அளித்த பதில் பின் வருமாறு:-

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது. இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிடுகிறது. PMFBY திட்டத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், தேவையான மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News