இந்தியா
null

இனிமேல் அது கராச்சி அல்ல.. நியூ காசி - பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

Published On 2025-05-09 11:18 IST   |   Update On 2025-05-09 11:40:00 IST
  • இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஆவார்.
  • பாகிஸ்தானின் பெயர் பவன்சுத்நாமா என மாற்றப்படும்.

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம் திறம்பட இடைமறித்து அழித்தது.

அதேநேரம் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்சு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

அதாவது, பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் என்றும் அதன்பின், "லாகூர் நகரின் பெயரை லவ் நகர் (லாகூர்காரர்களை மகிழ்விக்க), இஸ்லாமாபாத்தை இந்திரா நகர் (பாகிஸ்தானில் சரியான நேரத்தில் மழை பெய்ய உறுதி செய்ய), கராச்சியை நியூ காசி (காசியின் பண்டிதர்களை மகிழ்விக்க), பெஷாவரை பேஷ்வா நகர் (மராத்தா வாக்குகளைப் பெற) மற்றும் குவெட்டாவை கிருஷ்ணா நகர் (மதுராவின் சௌபேக் சமூகத்தினரை மகிழ்விக்க) என மாற்றுவோம். பாகிஸ்தானின் பெயர் பவன்சுத்நாமா என மாற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News