null
ஆந்திராவில் ஆகஸ்ட் 15 முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்- சந்திரபாபு நாயுடு
- வருடத்திற்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
- ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலை வாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார் சந்திரபாபு நாயுடு.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு தேசம் கட்சி அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை செயல்படுத்த உள்ளார்.
ஆகஸ்ட் 15 முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம், வருடத்திற்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.