இந்தியா

பக்கா தொழிலாளிகளுக்கு "பன்ச்" கொடுத்த முதலாளி

Published On 2023-11-04 13:27 GMT   |   Update On 2023-11-04 13:27 GMT
  • தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பணியாற்றுகிறார்கள்
  • என் பணியாளர்கள் எனக்கு ஊழியர்கள் அல்ல; நட்சத்திரங்கள் என்றார் பாடியா

அரியானாவின் பஞ்ச்குலா (Panchkula) நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம், மிட்ஸ்கார்ட் (MitsKart). அதன் நிறுவனர் எம்.கே. பாடியா (M.K. Bhatiya).

தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பாக பரிசளித்து அவர்களை மகிழ்விக்க நினைத்தார் பாடியா. இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் "ஆஃபீஸ் பாய்" (office boy) எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர். நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசளித்தார். இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை ரூ.6.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



"என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள். கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என அவர்களுக்கு பரிசளிப்பது குறித்து பாடியா கூறினார்.

பாடியா பரிசாக காரை வழங்கும் வீடீயோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News