இந்தியா
null

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான உரிமம் பெற்ற எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்..

Published On 2025-06-06 18:04 IST   |   Update On 2025-06-06 18:04:00 IST
  • தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும்.
  • கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இந்த உரிமத்திற்காக நிறுவனம் காத்திருந்தது.

அமெரிக்கத் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு (சாட்காம்) சேவைகளுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிடிஐ மற்றும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து இந்த வகை உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும். முன்னதாக, ஏர்டெல் முதலீடு செய்த யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மட்டுமே இத்தகைய உரிமங்களைக் கொண்டிருந்தன.

பிடிஐ செய்தியின்படி, உரிமம் பெற்ற பிறகு, விண்ணப்பித்த 15-20 நாட்களுக்குள் ஸ்டார்லிங்கிற்கு சோதனை அலைக்கற்றை வழங்கப்படும்.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக இந்த உரிமத்திற்காக நிறுவனம் காத்திருந்தது. உரிமம் பெற்ற பிறகு, ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க முடியும்.  

Tags:    

Similar News