இந்தியா

டெல்லி மேயர் தேர்தல் - பா.ஜ.க, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதலால் பரபரப்பு

Published On 2023-01-06 19:38 GMT   |   Update On 2023-01-06 19:38 GMT
  • டெல்லி மாநகராட்சி மேயர் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது.
  • இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது.

புதுடெல்லி:

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

இதற்கிடையே, மாநகராட்சித் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக மாமன்றக் கூட்டம் நேற்று கூடியது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

'ஆல்டா்மென்' எனப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த 10 உறுப்பினா்களை கவர்னர் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், டெல்லி அரசின் ஒப்புதலின்றி பரிந்துரைத்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்நிலையில், நேற்று காலை டெல்லி மாமன்றக் கூட்டம் கூடியவுடன் நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ஜ.க, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூச்சலிட்டதுடன் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில் சில கவுன்சிலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கவுன்சிலர்கள் மேசை மற்றும் மேடையின் மேல் ஏறி ஒருவரையொருவர் தத்தளித்தனர். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News