இந்தியா

1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு

Published On 2024-02-29 11:42 GMT   |   Update On 2024-02-29 11:42 GMT
  • 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அப்துல் கரீம் துண்டாவை போலீசார் கைதுசெய்தனர்.
  • இந்த வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டார்.

மும்பை:

1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 2013 ஆகஸ்டில் நேபாள எல்லையான பன்பாஸாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இன்று காலை 11.15 மணியளவில் துண்டா, இர்ஃபான், ஹமீதுதின் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் தடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், 1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தடா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனாலும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான், ஹமீதுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News