இந்தியா
CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 93.60 சதவீதம் தேர்ச்சி
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம்.
- 95 சதவீத மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. results.cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06 சதவீதம் அதிகரித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 2.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 95 சதவீத மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.