இந்தியா

டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- மாணவர்கள் வெளியேற்றம்

Published On 2023-04-12 12:53 IST   |   Update On 2023-04-12 12:53:00 IST
  • பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
  • வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

டெல்லி சாதிக் நகரில் தி இந்தியன் பள்ளி இருக்கிறது. அந்த பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News