இந்தியா

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு

Published On 2025-07-02 22:25 IST   |   Update On 2025-07-02 22:25:00 IST
  • குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் மட்டும் பாராளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது என என கிரண் ரிஜிஜூ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் மீது இந்த கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News