இந்தியா

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு

Published On 2025-11-04 12:17 IST   |   Update On 2025-11-04 12:17:00 IST
  • தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது.
  • காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.

இந்தியாவில் வேகமாக நகர்மாயமாகிய நகரங்களில் ஒன்று டெல்லி. காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் பெருக்கத்தால் தொடர்ந்து காற்று மாசு இங்கு அதிகரித்து வருகிறது. இது தற்போது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

தீபாவளி பண்டிகையிலிருந்து குறைந்த காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. காற்றின் தரநிலைபடி புள்ளி 301-400 வரை இருப்பது காற்று மாசு மிகவும் மோசம் என்பதை குறிப்பதாகும்.

டெல்லியில் உள்ள நொய்டா, காஜியாபாத்தில் 329-கவும், அலிப்பூரில் 421-கவும், வஜீர்பூர் மற்றும் ஜகாங்கிர்புரியில் 404-கவும், உள்ளது. காற்றின் தரம் மோசமாக உள்ளதால் தொடர்ந்து மூடுபனி நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியாக உயர்ந்தது. பருவ கால வெப்பநிலை சராசரியை விட 1.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக டெல்லி மாசுகட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News