இந்தியா
null

இந்தியாவில் முதன்முறையாக.. விமானங்களில் WIFI இணைய சேவையை அறிமுகம் செய்த ஏர் இந்தியா

Published On 2025-01-04 12:03 IST   |   Update On 2025-01-04 12:03:00 IST
  • 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
  • வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி உள்நாட்டு  விமானத்தில் இன்பிளைட் இன்டர்நெட் வழங்கும்  இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.

இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.

 

ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பயணிகள் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களில் உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம்.

பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

 

இந்த சாதனங்களை 'ஏர் இந்தியா வைஃபை' நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News