இந்தியா

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்-அப் மூலம் வழங்க நடவடிக்கை

Published On 2025-01-21 10:21 IST   |   Update On 2025-01-21 10:21:00 IST
  • பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்-அப் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் விஜயானந்த் கூறுகையில், `முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் படி மாநில அரசு விரைவில் வாட்ஸ்-அப் நிர்வாக சேவைகளை வழங்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் எளிதில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்த ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, சுகாதார அதிகாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News