இந்தியா

கடும் குளிர் எதிரொலி: உறைந்து கிடக்கும் காஷ்மீரின் தால் ஏரி

Published On 2024-01-18 12:01 IST   |   Update On 2024-01-18 12:01:00 IST
  • தால் ஏரி காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
  • காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்தது.

ஸ்ரீநகர்:

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.

இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தால் ஏரியின் சில பகுதிகள் உறைந்து காணப்படுகிறது.

குழந்தைகள், மூத்த குடிமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News