இந்தியா
null

கேரளாவில் பிறந்த அனைவருக்கும் 'கேரளீயன்' என்ற குடியுரிமை அடையாள அட்டை

Published On 2026-02-20 11:10 IST   |   Update On 2026-02-20 11:13:00 IST
  • கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும்.
  • கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.

திருவனந்தபுரம்:

கேரள மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை வழங்கப்படும். இதற்காக ஏற்கனவே பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.

கேரளீயன் என்ற குடியுரிமை அடையாள அட்டை பெற்ற பிறகு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்களது அடையாள அட்டை ரத்து செய்யப்படும். அடையாள அட்டை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அந்தந்த தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ளளது.

அரசு சேவைகளில், பல்வேறு துறைகளில் தேவைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் அடையாள ஆவணங்களுடன் கேரளீயன் அடையாள அட்டையையும் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News