இந்தியா

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் விபத்து- பலத்த காயமடைந்த கடற்படை அதிகாரி பலி

Published On 2023-04-10 03:50 IST   |   Update On 2023-04-10 03:50:00 IST
  • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்க உத்தரவு.
  • கடற்படையின் அனைத்துப் பணியாளர்களும் மோஹித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

23 வயதான இந்திய கடற்படை வீரர் மோஹித் என்பவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 8ம் தேதி) ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் கடல் நடவடிக்கையின் போது  ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹல் ஆர்டிஃபைசர் 4 பதவியில் (கடற்படை அதிகாரி) இருந்த மோஹித், ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்ற வழிகாட்டி ஏவுகணை போர்க்கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த மோஹித் இறந்ததாக மூத்த கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையின் அனைத்துப் பணியாளர்களும் மோஹித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News