இந்தியா
தீ விபத்து

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மீண்டும் தீ வைத்த மர்ம நபர்கள்- கிராம மக்கள் அச்சம்

Published On 2022-05-01 03:04 GMT   |   Update On 2022-05-01 03:04 GMT
தீ கட்டுக்குள் வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் மீண்டும் வனப்பகுதியில் தீ வைத்துவிட்டதாக ரேஞ்ச் அதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று காலை காட்டுத் தீ ஏற்பட்டது. மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது. தீயைக் கட்டுக்கொண்டு வரும் பணியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் மீண்டும் வனப்பகுதியில் தீ வைத்துவிட்டதாக ரேஞ்ச் அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து டுடு ரேஞ்ச் அதிகாரி ஆயுஷ் குப்தா கூறியதாவது:-

வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பற்றி நேற்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் 10.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சில உள்ளூர்வாசிகள் மீண்டும் தீ வைத்தனர். குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் துணை பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கொழுந்துவிட்டு எரியும் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் அக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், " எல்லோரும் பயப்படுகிறார்கள். நாங்கள் வனப்பகுதிக்கு அருகில் வசிக்கிறோம். இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் குடியிருப்பு பகுதிக்குள் நுழையக்கூடும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்.. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து குழு அமைப்பு- உத்தரகாண்ட் அரசு தகவல்
Tags:    

Similar News