இந்தியா
நிலக்கரி

கடந்த ஒரு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரிப்பு - மத்திய மந்திரி தகவல்

Published On 2022-05-01 02:56 GMT   |   Update On 2022-05-01 02:56 GMT
கடந்த ஒரு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு, பல மாநிலங்களில் 2 முதல் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் காரணமாகவே, மின்சார பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கோல் இந்தியாவின் உற்பத்தி ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 29 வரை 12 சதவீதம் அதிகரித்து, 1.7 மில்லியன் டன்னிலிருந்து 1.9 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி 1.6 மில்லியன் டன்னாக இருந்த இறக்குமதி, ஏப்ரல் 29-ந் தேதி 1.9 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News