இந்தியா
மத்திய அமைச்சர் அமித் ஷா- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

Published On 2022-04-30 15:11 IST   |   Update On 2022-04-30 15:11:00 IST
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதிநிதிகளான கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் சென்றனர்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.

உ.பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் இரண்டு முறை டெல்லி சென்றுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல்வர் யோகியுடன் பிரதிநிதிகளான கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

இதையும் படியுங்கள்..  தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி- ஒரு நபர் குழு விசாரணை தொடங்கியது

Similar News