இந்தியா
பியூஷ் கோயல்

நடப்பு ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல் தகவல்

Published On 2022-04-18 17:59 GMT   |   Update On 2022-04-18 17:59 GMT
கொரோனா பாதிப்பு, அதிக சரக்கு கட்டணம் போன்ற சவால்களுக்கு மத்தியில் ஏற்றுமதி வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி  2021-22-ம் நிதியாண்டில் 4600 மில்லியன் அமெரிக்க டாலராக அதாவது 291 சதவீதம் என்ற அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 

வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் தரவுகளின்படி, இந்தியா உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 2021-22-ம் ஆண்டில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக சரக்கு கட்டணங்கள், கொள்கலன் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள்  மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய சந்தைகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் உதவிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News