இந்தியா
கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட அசாம்

அசாமில் கனமழை, புயல் எதிரொலி- இதுவரை 14 பேர் பலி

Update: 2022-04-17 04:55 GMT
அசாமின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 592 கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையான புயலுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 592 கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையான புயலுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாவது:-

கனமழை மற்றும் கடுமையான புயல் காரணமாக திப்ருகார் மாவட்டத்தில் உள்ள டிங்காங் பகுதியில் கடந்த 15-ம் தேதி 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் பர்பேட்டா மாவட்டத்தில் 3 பேரும், கோல்பரா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்தனர்.

கோல்பாரா, பர்பேட்டா, திப்ருகார், கம்ரூப் (மெட்ரோ), நல்பாரி ஆகிய 592 கிராமங்களில் மொத்தம் 20,286 பேரும், கிராங், தர்ராங், கச்சார், கோலாகாட், கர்பி அங்லாங், உடல்குரி, கம்ரூப் ஆகிய மாவட்டங்கள் கடுமையான புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, புயலால் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திங்காங் பகுதியில் உள்ள மூங்கில் மரங்கள் வேரோட சாய்ந்ததில் சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கோல்பரா மாவட்டத்தின் மத்திய செக்டார் பகுதியில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மேலும், 5809 குடிசை வீடுகளும், 655 கல் வீடுகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில் 853 குடிசை வீடுகள் மற்றும் 27 கல் வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

இவ்வாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை
Tags:    

Similar News