இந்தியா
ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி

மார்ச் 21ல் உச்சி மாநாடு: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் - பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2022-03-17 14:03 GMT   |   Update On 2022-03-17 14:03 GMT
உச்சி மாநாட்டில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை வகுக்க பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் மார்ச் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைப்பெறவுள்ள இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை வகுக்க பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான சிறந்த கூட்டாண்மைக்கும், ராணுவ தளங்களை பரஸ்பர அணுகலுக்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படியுங்கள்.. வங்கக் கடலில் 21ஆம் தேதி புயல் உருவாகும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை
Tags:    

Similar News