இந்தியா
கேரள டாட்டூ கலைஞர் மீது புகார்

கேரளாவில் டாட்டூ வரைவதாக கூறி இளம் பெண்களிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட கலைஞர் மீது புகார்

Published On 2022-03-04 12:41 IST   |   Update On 2022-03-04 12:41:00 IST
கேரளாவில் டாட்டூ கலைஞர் இளம் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதயடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

இளைய தலைமுறையினர் இடையே உடலில் டாட்டூ வரைந்து கொள்வது இப்போது பே‌ஷனாகி வருகிறது.

குறிப்பாக நடிகைகள், மாடல் அழகிகள் பலரும் உடலில் டாட்டூ வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனை பார்த்து பல இளம்பெண்களும் தங்கள் உடலில் டாட்டூ வரைந்து கொள்ள டாட்டூ கலைஞர்களை தேடி செல்கிறார்கள்.

கேரளாவில் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவரின் பார்லருக்கு டாட்டூ வரைந்து கொள்ள நடிகைகள், மாடல் அழகிகள் பலரும் வந்து செல்வது வழக்கம்.

இவ்வாறு டாட்டூ வரைந்து கொள்ள சென்ற மாடல் அழகி ஒருவர் சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞரிடம் டாட்டூ வரைந்து கொள்ள சென்றதாகவும், அப்போது அவர் தன்னிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.

மாடல் அழகியின் புகாரை தொடர்ந்து மேலும் பலர் இதுபோன்ற புகார்களை கூறியிருந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் வைரலானது. இது போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News