இந்தியா
தாவூத் இப்ராஹிம் சகோதரி வீடு

மும்பையில் தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Published On 2022-02-15 15:22 IST   |   Update On 2022-02-15 15:22:00 IST
பணமோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டிலும் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை நடத்தியது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார். இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவத்தனை தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் இன்று 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத சொத்துக் குவிப்பு ஒப்பந்தம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் ஒரு பகுதியாக, பணமோசடி வழக்கு தொடர்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டிலும் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை நடத்தியது.



நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக மேலும் சோதனைகள் நடத்தப்படலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்.. கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் முதல் தொகுப்பை மத்திய அரசு இன்று பெறுகிறது

Similar News