இந்தியா
பிரதமர் மோடி

1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்- உலக தலைவர்களை பின்தள்ளி முதலிடம்

Published On 2022-02-01 08:22 GMT   |   Update On 2022-02-01 08:22 GMT
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி:

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் உலக தலைவர்களில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இருக்கிறார். இவரது யூடியூப் சேனலுக்கு  36 லட்சம்  சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.  மூன்றாவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டிகள், இந்தி திரைப்படத்துறையினருடான கலந்துரையாடல் உள்ளிட்ட வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News