இந்தியா
கைது செய்யப்பட்ட ஜோ மோன்

கோட்டயத்தில் வாலிபரை கொன்று போலீஸ் நிலையம் முன்பு பிணம் வீச்சு - ரவுடி சிக்கினார்

Update: 2022-01-17 05:04 GMT
கோட்டயம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் ஒருவரை அடித்து கொன்று பிணத்தை வீசி சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையம் முன்பு இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போன வாலிபர் கோட்டயம் விமலகிரி பகுதியைச் சேர்ந்த ஷான் பாபு என தெரிய வந்தது.

இவரை கொலை செய்தது யார் என்பது பற்றி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.இதில் ஷான் பாபுவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த ஜோமோன் என தெரியவந்தது. ஜோமோன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.

போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது. இதை அடுத்து போலீசார் ஜோ மோனை பிடித்தனர்.அவரிடம் விசாரித்தபோது ஷான் பாபுவுக்கும் அவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் இதன் காரணமாக அவரை தாக்கியதாகவும் கூறினார்.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News