இந்தியா
கோவின் தள தலைவர் ஆர்.எஸ்.சர்மா

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்பதிவு

Published On 2021-12-27 08:54 GMT   |   Update On 2021-12-27 08:54 GMT
ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி,முன்பதிவு செய்யலாம் என்று கோவின் தளத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.


தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மூன்றாம் தேதி போரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் 15 முதல் 18 வயது உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து கோவின் தளத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளதாவது : 

கோவின் செயலி மூலம் தடுப்பூசி போடும் சிறுவனின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக ஆதார் அட்டை இல்லாத பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழங்கி உள்ள மாணவர் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனெனில் சில பள்ளி மாணவர்கள் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை. எனவே கூடுதலாக மாணவர் அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு  டாக்டர் ஆர்.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி வரும் 3ம் தேதி முதல் போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News