இந்தியா
உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு
உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த நமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று உள்ளன. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதுகுறித்து மோடி டுவிட்டரில் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ஜோபைடனின் அழைப்பின் பேரில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த நமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அமைதியை சீர்குலைக்க நினைத்தால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் சேகர்பாபு