செய்திகள்
ஆந்திர மாநில சட்டசபை

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆந்திர அரசு தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-11-23 12:45 GMT   |   Update On 2021-11-23 12:45 GMT
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை மத்திய அரசு சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசு மக்கள் தொகை கண்கெடுப்பை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிறந்த இடம், மாநிலம், பெயர், ஆதார் எண் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

பல்வேறு தரப்பில் இருந்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Tags:    

Similar News