செய்திகள்
யாத்திரை புறப்பட்ட குருத்வாரா கமிட்டி உறுப்பினர்கள்

கர்தார்பூர் பாதை திறப்பு- உற்சாகத்துடன் குருத்வாராவுக்கு யாத்திரை புறப்பட்ட சீக்கியர்கள்

Published On 2021-11-17 04:43 GMT   |   Update On 2021-11-17 05:52 GMT
இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்:

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது.  இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக கர்தார்பூர் பாதை மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில், சீக்கிய யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கர்தார்பூர் பாதையை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டது. சீக்கியர்கள் வழிபாடு நடத்தி, அந்த பாதை வழியாக கர்தார்பூர் நோக்கி உற்சாகமாக யாத்திரை செல்லத் தொடங்கினர்.

Tags:    

Similar News