செய்திகள்
ஆர்யன் கான் வழக்கு கடத்தல், பணம் பறித்தல் பற்றியது: நவாப் மாலிக் குற்றச்சாட்டு
ஷாருக்கான மகன் போதை பொருள் பயன்படுத்தியதுடன், வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் உள்ளார்.
சொகுசு கப்பல் போதை பொருள் விருந்து நிகழ்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதை பொருள் உட்கொண்டதுடன், வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டிய போதைபொருள் தடுப்புப்பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இரண்டு வாரங்கள் ஜெயலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.
ஆர்யன் கான் மகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக், என்.சி.பி. அதிகாரி சமீர் வான்கடே மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். அவர் போலி சான்றிதழ் மூலம் பதவி பெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், தற்போது ஆர்யன் கான் வழக்கு கடத்தல், பணம் பறித்தல் பற்றியது. இதற்கு பா.ஜனதாவின் மோகித் கம்போஜ் மூளையாக செயல்பட்டார் என புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து நவாக் மாலிக் கூறுகையில் ‘‘ஆர்யன் கான் சொகுசு கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கவில்லை. பிராடிக் கபா மற்றும் அமிர் பர்னிச்சர்வாலா ஆர்யன் கானை கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். இது கடத்தல் மற்றும் அதன்மூலம் பணம் பறித்தல் விவகாரம். மோகித் கம்போஜ் இதற்கு மூளையாக இருந்து, சமீர் வான்கடேவுடன் பணம் பறிப்பதில் உடந்தையாக உள்ளார்.
முதல் நாளில் இருந்தே ஷாருக்கான் மிரட்டப்பட்டுள்ளார். பணம் கைமாறிய குற்றச்சாட்டில் ஷாருக்கான் மானேஜர் பெயர் அடிப்பட்ட நாளில் இருந்தே, இதுபற்றி வெளியில் கூறக்கூடாது என்று ஷாருக்கானிடம் கூறியுள்ளனர்.
ஷாருக்கான் பொதுவெளிக்கு வந்து பேச வேண்டும். மகன் கடத்தப்பட்டால், பணம் கொடுப்பது குற்றம் அல்ல’’ என்றார்.