செய்திகள்
அமரீந்தர் சிங் (கோப்புப்படம்)

பஞ்சாப் லோக் காங்கிரஸ்: புதுக்கட்சி பெயரை அறிவித்தார் அமரீந்தர் சிங்

Published On 2021-11-02 17:40 IST   |   Update On 2021-11-02 17:40:00 IST
தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன், ஆனால் பா.ஜனதாவில் இணையமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அதன்பின் புதிய கட்சி தொடங்குவேன். அதற்கான வேலைகளை தனது வழக்கறிஞர் செய்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கட்சிப் பெயரை அறிவித்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

Tags:    

Similar News