செய்திகள்
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாபுல் சுப்ரியோ

பாஜகவில் இருந்து வெளியேறிய பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்

Published On 2021-09-18 10:59 GMT   |   Update On 2021-09-18 10:59 GMT
மேற்கு வங்காளத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்புக்காக அரசியலுக்கு திரும்பி வந்திருப்பதாக பாபுல் சுப்ரியோ கூறினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய மந்திரியுமான பாபுல் சுப்ரியோ சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகினார். மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் கட்சியில் இருந்து விலகியதுடன், எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போது அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், பாபுல் சுப்ரியோ இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். பின்னர் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகவேண்டாம் என தனது நண்பர்கள் எடுத்து கூறியதாகவும், தற்போது மிகப்பெரிய வாய்ப்பு வந்ததால் திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததாகவும் கூறினார்.

‘மேற்கு வங்காளத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்புக்காக அரசியலுக்கு திரும்பி வருகிறேன். நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். முதல்வர் மம்தா பானர்ஜியை திங்கட்கிழமை சந்திக்க உள்ளேன். முதல்வரும், அபிஷேக்கும் எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர். நான் வெற்றி பெற்ற அசன்சோல் தொகுதிக்கு முடிந்தவரை பணிகளை செய்வேன்’ என்றும் பாபுல் சுப்ரியோ கூறினார்.
Tags:    

Similar News