செய்திகள்
மதுபானம்

கேரளாவில் ஆன்லைன் மதுபான விற்பனை நிறுத்தம்

Published On 2021-04-30 05:33 GMT   |   Update On 2021-04-30 05:33 GMT
வீடு தேடி வரும் ஆன்லைன் மது விற்பனையை நிறுத்த மாநில கலால் வரித்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.

இந்த நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மது விற்பனையை நிறுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில் மொத்த மது விற்பனையை கேரள மதுபான கழகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் ஆன்லைன் மது விற்பனையை தொடங்கியது.

அதன்படி ஸ்மார்ட்போன் மூலம் ஆர்டர் செய்து மதுபானம் பெற்று வந்தனர். திறன்பேசி போன் இல்லாதவர்கள் எஸ்எம்எஸ் செய்தும் மதுபானங்களை ஆர்டர் செய்து பெற்று வந்தனர்.

இந்த திட்டம் மது பிரியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனால் கேரள மதுபானக் கழகத்தின் ஆண்டு வருவாய் அதிகரித்தது.



இந்த நிலையில் மது குடித்து விட்டு கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் குடிமகன்கள் வெளியே சுற்றித்திரிவதாக புகார் எழுந்தது. இதனால் கொரோனா பரவல் மேலும் பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வந்தனர்.

கேரள அரசு ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் வீடு தேடி வரும் ஆன்லைன் மது விற்பனையை நிறுத்த மாநில கலால் வரித்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்ற பின்னர் ஆன்லைன் மது விற்பனை குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News