செய்திகள்
திருப்பதி அலிபிரி சுங்கச்சாவடி

திருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு

Published On 2021-02-27 05:30 GMT   |   Update On 2021-02-27 05:30 GMT
திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.50 முதல் ரூ.20 வரை கட்டணங்களை தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.
திருப்பதி:

திருப்பதி அலிபிரியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்களை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.

திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பதி அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும்.

இச்சாவடியில் அனைத்து பக்தர்களும், அவர்களின் உடமைகளும், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன்பின்னரே வாகனங்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு தேவஸ்தானம் சுங்க கட்டணத்தை வசூலிக்கிறது.

வாகனங்களுக்கு ஏற்றபடி ரூ.15 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலித்து வந்தது. தற்போது இந்த கட்டணங்களை தேவஸ்தானம் ரூ.50 முதல் ரூ.20 வரை உயர்த்தி உள்ளது.

சுங்கச்சாவடியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் கட்டண விவரம் வருமாறு:-

பைக், இருசக்கர வாகனங்கள் ரூ.2, கார்கள் ரூ.50, ஜீப், சுமை ஆட்டோ ரூ.50, டாக்சிகள் (5+1) ரூ.50, டாக்சிகள் (8+1) ரூ.50, சிற்றுந்து, லாரி ரூ.100, சரக்கு வாகனம் ரூ.100, கண்டெய்னர் ரூ.200, பஸ், டிராக்டர் ரூ.200.

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News