செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கூடுதலாக மேலும் 8 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள்

Published On 2020-10-18 22:03 GMT   |   Update On 2020-10-18 22:03 GMT
தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கு கூடுதலாக மேலும் 8 பண்டிகை கால சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கு கூடுதலாக மேலும் 8 பண்டிகை கால சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* ஜாம்நகர்-நெல்லை(வண்டி எண்: 09578) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஜாம்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக நெல்லை-ஜாம்நகர்(09577) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதியில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

* திருவனந்தபுரம்-கோர்பா (02648) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22, 26, 29-ந்தேதி, நவம்பர் மாதம் 2, 5, 9, 12, 16, 19, 23, 26, 30-ந்தேதிகளில் காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கோர்பா-திருவனந்தபுரம்(02647) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 24, 28, 31-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 4, 7, 11, 14, 18, 21, 25, 28, 30-ந்தேதி மற்றும் டிசம்பர் மாதம் 2-ந்தேதிகளில் கோர்பா ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும்.

* பூரி-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(02859) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் மாலை 5.30 மணிக்கு பூரியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-பூரி(02860) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் மாலை 4.25 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும்.

* விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல்(02869) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி, நவம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் இரவு 9.05 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம்(02870) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும்.

* புவனேஸ்வரம்-சென்னை சென்டிரல்(02839) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22, 29-ந்தேதி, நவம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளில் மதியம் 12 மணிக்கு புவனேஸ்வரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-புவனேஸ்வரம்(02840) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23, 30-ந்தேதி, நவம்பர் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளில் இரவு 9.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும்.

* புவனேஸ்வரம்-ராமேஸ்வரம்(08496) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23, 30-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளில் மதியம் 12 மணிக்கு புவனேஸ்வரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ராமேஸ்வரம்-புவனேஸ்வரம்(08495) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும்.

* மதுரை-பிகானர்(06053) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22, 29-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளில் காலை 11.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக பிகானர்-மதுரை(06054) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி, நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் மதியம் 3 மணிக்கு பிகானர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* ஐதராபாத்-தாம்பரம்(02760) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை மாலை 6.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக தாம்பரம்-ஐதராபாத்(02759) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை மாலை 5.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News