செய்திகள்
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2020-09-05 23:00 GMT   |   Update On 2020-09-05 23:00 GMT
டெல்லியில் கொரோனா முற்றிலும் கட்டுக்குள இருக்கிறது என்பதை உறுதிபடுத்த விரும்புவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்தியாவில் தலைநகர் டெல்லியும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உளளது.

இந்த நிலையில், நேற்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் அளத்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி கொரோனா மீது போரை அறிவித்து உளளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் மீது எதிர் தாக்குதலை நடத்தியுளளோம். நாங்கள கொரோனா பரிசோதனையை இரட்டிப்பாக்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் அதிகளவில் பரிசோதனைகள செய்யப்படுவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதைப் பற்றி கவலை கொளளதேவையில்லை.

டெல்லியில் கொரோனா முற்றிலும் கட்டுக்குள இருக்கிறது என்பதை உறுதிபடுத்த விரும்புகிறேன். இறப்பு விகிதம் 1 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 87 சதவீதமாகவும் உளளது.

நேற்று (நேற்று முன்தினம்) இறப்பு எண்ணிக்கை 13 ஆக குறைந்தது. இது நாட்டிலேயே மிக குறைவு. கொரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News