செய்திகள்
பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்

பெங்களூருவில் முக கவசம் அணிவதில் எந்த விலக்கும் அளிக்கவில்லை: மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

Published On 2020-08-28 03:24 GMT   |   Update On 2020-08-28 03:24 GMT
பெங்களூரு மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், முக கவசம் அணிவதில் எந்த விதமான விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், தனி நபராக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிய வேண்டாம் என்றும், பூக்காக்களில் நடைபயிற்சியில் மேற்கொள்பவர்கள் முக கவசம் அணிய வேண்டாம் என்றும், அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவிக்கப்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியாகி இருந்தமது. ஆனால் பெங்களூரு மாநகராட்சி சார்பில் முக கவசம் அணிவதில் எந்த விதமான விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் தனிநபராக செல்பவர்கள், பூக்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முக கவசம் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல. அவ்வாறு வெளியான தகவல் வதந்தி மட்டுமே. அதுபோன்ற விலக்கு எதையும் மாநகராட்சி அறிவிக்கவில்லை. கொரோனா பாதிப்பு இருப்பதால் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே தீரவேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா காரணமாக பிறப்பிக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News