செய்திகள்
கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் இன்று புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 65 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 3 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கொரோனா தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.