செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

Published On 2020-06-18 07:47 GMT   |   Update On 2020-06-18 07:47 GMT
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
புவனேஸ்வரம் :

ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. இந்த ஆண்டின் ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தர யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

பக்தர்கள் அதிகளவில் கூடலாம் என்பதால் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த வருடாந்திர ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News